உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அருகே எஸ்.பி., அலுவலகத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தர்ணா

திண்டுக்கல் அருகே எஸ்.பி., அலுவலகத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தர்ணா

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் காளியம்மன் மற்றும் மண்டு கோயில்கள் உள்ளன.

இவற்றை மராமத்து செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடந்தது. இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டை நாடினர்.

இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்த போலீஸ், மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் நேற்று (டிசம்., 3ல்) எஸ்.பி., அலுவலகத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தர்ணா செய்தனர்.

அவர்கள் எஸ்.பி., சக்திவேலிடம் கொடுத்த மனுவில், "திண்டுக்கல் முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட்டு உத்தரவுப்படி கோயில்களை மராமத்து செய்து 12-12-18 அன்று
கும்பாபிஷேகம் நடத்த பாதுகாப்பு தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

கலெக்டர் அலுவலகத்திலும் அவர்கள் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !