திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :2576 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.
நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு காடசியளித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் தேவாரம்,
திருவாசகம் போன்ற பக்தி பாடல்களை பாடினர். மாலையில் காளை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொண்டி ஏகாம்பரேஸ்வரர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.