சின்னமனூரில் ஐயப்பன் லட்சார்ச்சனை
ADDED :2518 days ago
சின்னமனுார்: சபரிமலையில் மண்டல கால பூஜையை ஒட்டி சின்னமனுார் பஜனை மடத்தில் குருசாமி லோகேந்திர ராஜன் தலைமையில், ஐயப்ப நாமம் சொல்லி லட்சம் முறை அர்ச்சனை நடக்கிறது. ஐயப்பனின் 108 மந்திரத்தை கூறி 12 குருசாமிகள் தினமும் அர்ச்சனை செய்கின்றனர். இங்கு முல்லை பெரியாற்றில் 28 ம் ஆண்டு ஐயப்பன் ஆராட்டு விழா டிச. 8 ல் நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த பஜனை சபையினர் செய்துள்ளனர்.