உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆதிபராசக்தி பக்தர்கள் மாலை அணிந்து ஊர்வலம்

விழுப்புரம் ஆதிபராசக்தி பக்தர்கள் மாலை அணிந்து ஊர்வலம்

விழுப்புரம்:விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் பக்தர்கள் தைப்பூச மாலை அணிந்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் நேற்று (டிசம்., 6ல்) காலை 11.00 மணிக்கு பக்தர்கள் 1,008 பேர், சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி ரயில் மூலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு புறப்பட்டனர்.இதனை தொடர்ந்து வரும் ஜன., 21ம் தேதி தைப்பூசம் வரை, தினந்தோறும் பக்தர்கள் விழுப்புரத்தில் இருந்து சக்தி மாலை அணிந்து மேல்மருவத்தூருக்கு புறப்படுகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ஜெயபாலன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !