/
கோயில்கள் செய்திகள் / பாகூர்:சேலியமேடு கோகுலகிருஷ்ணன் கோவிலுக்கு,மகா மண்டபம் கட்ட நிதி உதவி வழங்கல்
பாகூர்:சேலியமேடு கோகுலகிருஷ்ணன் கோவிலுக்கு,மகா மண்டபம் கட்ட நிதி உதவி வழங்கல்
ADDED :2580 days ago
பாகூர்:சேலியமேடு கோகுலகிருஷ்ணன் கோவிலுக்கு, முன் முகப்பு மகா மண்டபம் அமைக்க, இந்து அறநிலைய சார்பில், 1.25 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.
பாகூர் அடுத்துள்ள சேலியமேட்டில் கோகுலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, முன் முகப்பு மகா மண்டபம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்து அறநிலைய துறை சார்பில், 1.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான, காசோலையை அமைச்சர் கந்தசாமி, கோகுல கிருஷ்ணன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஜானகிராமன் ரெட்டியாரிடம் வழங்கினார். நிர்வாக குழுவினர் உடனிருந்தனர்.