உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று (டிசம்., 6ல்), அமாவாசையை முன்னிட்டு கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர். அமாவாசையை முன்னிட்டு நேற்று (டிசம்., 6ல்) இரவு கோவில் நடை அடைக்கப்படவில்லை. கோவில் நிர்வாகத்தினர், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !