ஜெயின் சமூக துறவியர் வாலாஜாபாத் வருகை
ADDED :2534 days ago
வாலாஜாபாத்: பிறருக்கு தீங்கு இழைக்காத, அஹிம்சையை வலியுறுத்தி, ஜெயின் சமூக துறவியர், நடை பயணமாக நேற்று, (டிசம்., 7ல்)வாலாஜாபாத் வந்தனர்.ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த துறவியர் பலர், நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களில் சிலர், நேற்று முன்தினம் (டிசம்.,6ல்) காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வந்தனர். அவர்களுக்கு, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த, ஜெயின் சமூகத்தினர் வரவேற்பு
அளித்தனர். வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அஹிம்சை மற்றும் நன்நெறிகள் குறித்து, ஆச்சார்யர் ஸ்ரீமஹாஸ்ரமன் சொற்பொழிவு ஆற்றினார்.இதில், ஜெயின்
சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பினர் பங்கேற்றனர்.