ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தினமும் சிறப்பு அன்னதானம்
ADDED :2534 days ago
ரெகுநாதபுரம்: வல்லபை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். கார்த்திகை முதல் நாளில் இருந்து தொடர்ச்சியாக பகலில் அன்னதானம் நடந்து வருகிறது.
மூலவர் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம், கணபதி ஹோமம், உலக நன்மைக்கான சிறப்பு யாகசாலை வேள்விகள் நடக்கிறது.
கோயில் வளாகத்தில் தினமும் ஆன்மிகச் சொற்பொழிவு, பஜனை, ஐயப்ப நாம அர்ச்சனை, நாமாவளி, ஸ்தோத்திரப்பாடல்கள் பாடப்படுகிறது.ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் சேவை நிறைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.