சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் சித்தர் ஜீவசமாதியில் சிறப்பு பூஜை
ADDED :2771 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள சித்தர் ஜீவசமாதியில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த சித்தர் குழந்தைவேல் சுவாமிகள், கோவிலில் உள்ள பிரணவ தீர்த்தத்தில் முக்தியடைந்து ஜல சமாதி நிலையில் இருந்தார்.இவருக்கு மலையின் தென்மேற்கு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது.
அவரது நினைவாக ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று முன்தினம் (டிசம்., 6ல்)அமாவாசையை முன்னிட்டு, ஜீவ சாமதியடைந்த இடத்தின் மேல் உள்ள பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.