உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் இன்று (டிசம்., 8ல்) துவக்கம்

திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் இன்று (டிசம்., 8ல்) துவக்கம்

கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் இன்று (டிசம்., 8ல்) துவங்குகிறது.திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் இன்று 8ம் தேதி துவங்கி, வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (டிசம்., 8ல்)காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.தொடர்ந்து, பகல் பத்து மண்டபத்தில் சுவாமி பத்தி உலாவும், பாராயணமும், சேவை சாற்றுமுறையும் நடக்கிறது. இதேப் போன்று, வரும் 17ம் தேதி வரை தினமும் காலை 11:00 மணிக்கு சுவாமி பத்தி உலா, பாராயணம், சேவை சாற்றுமுறை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !