ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து இரண்டாம் நாள்
ADDED :2861 days ago
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் துவங்கி நடைபெற்றுவருகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் இரட்டைமாலை, முத்துச்சரம், பாண்டியன் கொண்டை, தாயார் பதக்கம் வைர அபய ஹஸ்தம், உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து மூலஸ்தானத்தில் இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் டிசம்பர் 18ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.