உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில்  பாரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்கும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்து, பாரிவார தெய்வங்களுக்கு, முதற்கட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது.   ராஜகோபுரம் வாயிலில் உள்ள விநாயகர் கோபுரம், ஆதி ஜெம்புகேஸ்வரர் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரண்டாம் கட்டமாக, டிசம்பர், 12ம் தேதி, 7 மணிக்கு மேல், ஜம்புகேஸ்வரர்,  அகிலாண்டேஸ்வரி சுவாமிகளுக்கும், கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !