பழநியில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்
ADDED :2594 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக் கோயிலுக்கு வழக்கமாக சனி, ஞாயிறு தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதாலும், நேற்று விமுறை நாள் என்பதாலும் மலைக்கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்துவந்தனர்.ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயிலில் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் முருகனை தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.