சபரிமலை வாகனங்களுக்கு தேனியில் 2 இடங்களில் பெர்மிட்
தேனி: தேனி வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இரு இடங்களில் வாகன பெர்மிட் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் வாகனங்களில் செல்லும் வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் தேனி- குமுளி ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். கேரளா செல்ல வாகன பெர்மிட், தேனி அடுத்த பழனிசெட்டிபட்டி ஆர்.டி.ஓ., சோதனைசாவடியில் வழங்கப்படுகிறது.
இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்தவோ, இயற்கை உபாதை கழிக்கவோ இடவசதி இல்லை.போதிய இடவசதியுடன் ஏற்கனவே செயல்பட்டுவந்த வீரபாண்டி பகுதியில் சீசனுக்காக, சோதனை சாவடியை அமைத்து பெர்மிட் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து அங்கு தற்காலிக சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இரு இடங் களிலும் பெர்மிட் பெறலாம் என்பதால் நீண்ட நேர காத்திருப்பு, நெரிசல் குறையும்.தேனி ஆர்.டி.ஓ., சேக்முகமது கூறியதாவது: இந்தாண்டு ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாக தான் உள்ளது. இரு சோதனை சாவடிகளிலும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியமர்த் தப்பட்டு பெர்மிட் வழங்கப்படுகிறது. தணிக்கை பணிகளும் எளிமையாக உள்ளது, என்றார்.