மேட்டுப்பாளையம் அய்யப்பன் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :2530 days ago
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - காரமடை ரோட்டில் சிவன்புரம் அருகே அய்யப்பன் கோவில் உள்ளது. இதன், 28ம் ஆண்டு மண்டல மகோற்சவ விழா மற்றும் மண்டல பூஜை கடந்த மாதம், 17ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தினமும் அய்யப்பனுக்கு புஷ்பா பிஷேகம் பூஜை நடைபெற்று வருகிறது.
கடந்த, 8ம் தேதி லட்சார்ச்சனை பூஜை துவங்கி, நேற்றுடன் (டிசம்., 10ல்)முடிவடைந்தது. விஷ்ணு பட்டதிரிபாடு மற்றும் அர்ச்சகர்கள் லட்சார்ச்சனையை நடத்தினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.