கிருஷ்ணராயபுரம் கருப்பத்தூர் கோவிலில் 108 சங்கு வைத்து சிறப்பு பூஜை
ADDED :2593 days ago
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், கார்த்திகை மாதம் நான்காம் சோமவார விழா முன்னிட்டு, சுவாமிக்கு, 108 சங்கு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூரில், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவி லில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நான்காவது சோமவார விரத நாளில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 108 சங்கு பூஜை நடந்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று 10ல், சுவாமிக்கு, சங்கு பூஜை நடந்தது. லாலாப்பேட்டை, கருப்பத்தூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.