சபரிமலை புனிதம் காக்க பக்தர்கள் நடைபயணம்
ADDED :2525 days ago
அரூர்: சபரிமலையின் புனிதம் காக்க, திருப்பத்தூரில் இருந்து, சபரிமலைக்கு பக்தர்கள் நடைபயணமாக சென்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த, 12 பேர், குருசாமி என்பவர் தலைமையில், அரூர் வழியாக, சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து, குருசாமி கூறியதாவது: கடந்த, 25 ஆண்டுகளாக, சபரிமலைக்கு சென்று வருகிறேன். சபரிமலையின் புனிதம், பாரம்பரியம் காக்க, கடந்த, 9ல், திருப்பத்தூரில் உள்ள தர்மராஜா கோவிலில் இருந்து, நடைபயணத்தை துவங்கினோம். ஊத்தங்கரை, அரூர், சேலம், நாமக்கல், குமுளி வழியாக, 550 கிலோ மீட்டர் தூரம், 15 நாட்களில் நடைபயணமாக சென்று, சுவாமியை தரிசனம் செய்ய உள்ளோம். சபரிமலையில், பெண்களை அனுமதிப்பது, பாரம்பரியத்தை மீறும் செயல். குறிப்பிட்ட வயது வரை, சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.