உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சன்னிதானத்தில் மாசு கட்டுப்பாடு ஆய்வகம்

சபரிமலை சன்னிதானத்தில் மாசு கட்டுப்பாடு ஆய்வகம்

சபரிமலை: மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.சபரிமலை சன்னிதானத்தில் குடிநீர், காற்று, சுற்றுப்புறங்களில் உள்ள மாசு பற்றி ஆய்வு நடத்த தற்போது வசதி இல்லை. பம்பையில் மட்டுமே தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வகம் உள்ளது. சன்னிதானத்தில் ஏதாவது தேவை ஏற்பட்டால் பம்பைக்கு அனுப்பிதான் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. எனவே சன்னிதானத்தில் புதிதாக ஆய்வகம் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாண்டித் தாவளத்தில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அருகில் இதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆய்வகத்துக்கு தேவையான கருவிகள் வாங்க டெண்டர் முடித்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ரசாயனங்கள் பம்பை வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த ஆய்வகத்தின் செயல்பாடு தொடங்கும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலெக்சாண்டர் ஜார்ஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !