உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் மாதங்களில் எப்போதும் மார்கழி மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான் திருப்பாவையை ஆண்டாளும், திருவெம்பாவையை மாணிக்க வாசகரும், உலகுக்கு அருளினர். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கும் வைபவமும், சிவன் கோயில்களில் திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசனமும் சிறப்பாக நடைபெறும். இத்தனை சிறப்புகளை கொண்ட மாதம் இன்று பிறந்ததையடுத்து அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. மார்கழி மாத பிறப்பையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் செளரிராஜபெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மார்கழி முதல் காலை பொழுதில் பஜனை பாடிக்கொண்டு மயிலாப்பூர் மாட விதிகளை பஜனை கோஷ்டியினர் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !