திருச்சீரங்கநாதன் பள்ளி
ADDED :2882 days ago
ஆழ்வார்களால் பாடல்பெற்ற 108 திவ்யதேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சியை ஸ்ரீரங்கநாதன்பள்ளி என அழைத்தனர். மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்த பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கி திருச்சீரங்கநாதன்பள்ளி என்றழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, இப்போதுதிருச்சியாக சுருங்கி விட்டது.