ஒரு தடவை இருந்தா 24 தடவை இருந்த மாதிரி...!
ADDED :2882 days ago
வைகுண்ட ஏகாதசியை விட மிக உயர்ந்த ஏகாதசியாகக் கருதப்படுவது மாசி மாதம் வரும் ஏகாதசியாகும். பாண்டவர்களில் ஒருவனான பீமன் எதையும் பொறுப்பான். ஆனால் பசி பொறுக்க மாட்டான். எனவே அவனால் ஏகாதசி விரதமிருக்க முடியவில்லை. இதையறிந்த துரியோதனனும், கர்ணனும் கேலி பேசினர். வியாசமகரிஷியிடம் சென்ற பீமன், “என்னால் ஒரு வருடத்தில் எல்லா ஏகாதசி விரதங்களை அனுஷ்டிக்க முடியாது. ஒரே ஒரு ஏகாதசி விரதமிருந்து 24 ஏகாதசி விரத பலன்களையும் அடைய வழியிருக்கிறதா?” எனக் கேட்டான். மாசி வளர்பிறை ஏகாதசியன்று விரதமிருந்தால் இந்த பலனை அடைய முடியும் என்றார். இந்த ஏகாதசியை ’பீம ஏகாதசி’ என அழைப்பர்.