ஆசையே அலை போலே...
ஒருவர் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு டூவீலரில் பறந்து கொண்டு இருந்தார். பல்லாங்குழி ரோட்டில் வண்டியின் அதிர்வில், பேண்ட் பாக்கெட்டில் இருந்த ௧00 தாள் கொண்ட நூறு ரூபாய் கட்டு ஒன்று விழுந்தது.
விழுந்த வேகத்தில் கட்டிலிருந்து ஒரு நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் சற்று தள்ளி விழுந்தது.
அந்த வழியே வந்த ஒருவன், அந்த ஒருதாளை எடுத்து, ‘இன்று நரிமுகத்தில் விழித்திருக்கிறேன் போல‘ என மகிழ்ந்தான்.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பிச்சைக்காரர்களுக்கும் கொடுத்து
மகிழ்ந்தான்.
கடவுளுக்கு நன்றி சொல்லியபடி வீடு திரும்பினான்.
மீதமுள்ள 99 நோட்டுகளும் கட்டாக விழுந்த இடத்தில் கிடந்தன. சற்று நேரம் கழித்து அவ்வழியே வந்த ஒருவன் பார்த்ததும் பரபரத்தான். கையில் எடுத்து எண்ணத் தொடங்கினான். 99 நோட்டுகள் இருந்தன. பலமுறை எண்ணியும் அதே
99 நோட்டுகள் தான்.
‘வங்கியில் குறைவாக தர மாட்டார்களே... நூறாவது தாள் பக்கத்தில் எங்கேனும் தான் கிடக்க வேண்டும்‘ எனத்
தேட ஆரம்பித்தான். அந்த ஒற்றைத் தாளை தேடினான்... தேடினான்...
தேடிக் கொண்டே இருந்தான்.
நூறு ரூபாய் மட்டும் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனால் 9௯00 ரூபாய் கிடைத்தவனோ ஒரு நோட்டுக்காக அல்லாடிக் கொண்டிருந்தான். நம்மில் பலர்
இப்படித் தான்... கிடைத்ததை அனுபவிக்காமல், கிடைக்காததை எண்ணி சோர்வுக்கு ஆளாகிறோம்.
உணவும், ஆடையும் இருந்தால் அதுவே போதும் என திருப்தி அடையுங்கள்.
அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் மனநிம்மதி இழக்க நேரிடும் என்கிறது பைபிள்.