உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரி நதியின் மேன்மை

காவிரி நதியின் மேன்மை

ஒருமுறை கங்கை, காவிரி, யமுனை ஆகிய நதிதேவியர் மூவரும் இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வழியாகச் சென்ற கந்தர்வன் ஒருவன் மூவரையும் வணங்கினான். அவன் யாரை வணங்கினான் என்பதில் கங்கை, காவிரிக்குள் விவாதம் எழுந்தது. இருவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். திரிவிக்ரம அவதாரத்தின் போது கங்கை தனது நூபுரத்தை (கால் சலங்கை) நனைத்துச் சென்றதால் அவளுக்கு ’ நூபுர கங்கை’ என பெயர் ஏற்பட்டது. மேலும் என் திருவடிகளில் தோன்றிய அவளையே கந்தர்வனும் வணங்கியிருப்பான்,” என்றார் மகாவிஷ்ணு. இதைக் கேட்டு மனம் வருந்திய காவிரி கங்கையை விட உயர்ந்தவள் என்பதை வெளிப்படுத்த தவம் புரிந்தாள். மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சியளித்து, “ராமாவதாரம் முடிந்ததும் நான் உனது மடியில் சயனிக்க வருவேன். அப்போது வைகுண்டத்தில் ஓடும் விரஜாநதிக்கு இணையான அந்தஸ்து பெறுவாய்” என்றார். அதன்படி காவிரியின் மத்தியில் ஒரு மேடும், அதில் சந்திர புஷ்கரணியும் உருவாயின. மேடான இடத்தை ’அரங்கம்’ என்பர். அப்பெயரே ஊருக்கும், சுவாமிக்கும் ஏற்பட்டது.  இவ்வூர் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதால் ’ஸ்ரீ’ என்ற சொல் இணைந்து ’ஸ்ரீரங்கம்’ ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !