உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மம் தலை காக்கும்

தர்மம் தலை காக்கும்

வழிகாட்டுகிறார் வள்ளலார்

* தர்மம் கொடுப்போரைத் தடுக்காதே. செய்த தர்மம் ஒருவனை வாழ வைக்கும்.  
* கடவுள் நினைப்பு இல்லாதவர் வீட்டில் உணவு உண்பது கூடாது.
* கடவுளிடத்தில் தூய அன்பும், பக்தியும் செலுத்த வேண்டும்.
* ஒருபோதும் கடவுளைத் தாழ்த்தியும், மனிதனை உயர்த்தியும் பேசுதல் கூடாது.
* மற்றவர்களிடம் உரத்துப் பேசல், சண்டை இடுதல், வம்பு, வழக்காடுதல் கூடாது.
* ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முதற்படி புலால்மறுத்தல். சாத்வீக உணவால் நல்ல சிந்தனை உருவாகும்.  
* குருவை வணங்க தயங்காதே. உன் வாழ்வில் அவர்களின்
உபதேசங்களை பின்பற்றி நட.
* வட்டியைப் பெருக்கி எளியோரின் சொத்துகளை அபகரிக்காதே.
* பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ குற்றமின்றி நேர்வழியில் நடந்து காட்டு.
* நல்ல எண்ணமே உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
* நீதி, நேர்மை தவறாமல் ஒழுக்கமுடன் வாழக் கற்றுக்கொள்.
* யாரையும் கடுகடுத்த முகத்துடன் பார்க்காதே. எப்போதும் முகமலர்ச்சியுடன் இரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !