உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையை பேசி நன்மையை செய்

உண்மையை பேசி நன்மையை செய்

* பேசுவதாக இருந்தால் உண்மை பேசு. செய்வதாக இருந்தால் நல்லதை செய்.
* எதில் ஈடுபட்டாலும் நிகழ்காலத்தில் கவனமுடன் செய்.
* நம்பிக்கை உள்ளவனாக மனதை மாற்றிக் கொள்.
* தற்புகழ்ச்சியால் ஒருவனின் வளர்ச்சி தடைபடும். கடமையில் முனைப்புடன் ஈடுபடு. பலனைக் கடவுளிடம் விட்டுவிடு.
* தியானமே உனக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை வெளிக் கொண்டு வரும்.
* உன் வேண்டுதலை புறக்கணித்து விட்டு, கடவுளின் வேண்டுதல் எது என அறிந்து கொள். கடவுளை அறிந்தவர்களே தூய இன்பத்தை அறிந்தவர்கள்.
* கடவுள் வழிபாடே மனிதனுக்கு உண்மையான உதவியாக இருக்கிறது.      
* கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.      
* கடவுளின் கையில் ஒரு கருவியாக மனம் இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவனுக்கே கடவுள் பாதுகாவலராக இருக்கிறார்.
* நம்பிக்கை உள்ளவனுக்கு கடவுள் நண்பனாக தெரிகிறார். நமக்குத் தேவையானவை எல்லாமே கடவுளிடம் உள்ளன.
* மனம் என்பது ’பாலீஷ்’ செய்யப்பட்ட கண்ணாடி. அதை தூய்மையாக வைத்துக் கொள்வதும், அதன் மீது தூசு படியாமல் பார்த்துக் கொள்வதும் நமது தொடர்ச்சியான பணி. - கட்டளையிடுகிறார் ஸ்ரீ அன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !