கஷ்டத்தை விலைக்கு வாங்கிய தியாக தீபம்!
கிருஷ்ணாவதாரம் எடுத்து கீதையை <உபதேசித்த பிறகும், உலகில் நடந்த அட்டூழியங்கள் குறையவில்லை. மாறாக, கலி பிறந்ததால், முன்பை விட கொடிய நிகழ்ச்சிகளே நடந்தன. பக்தி அறவே அற்றுப்போனது. நல்லவர்களால் வாழ முடியவில்லை. எனவே, திருமால் லட்சுமியிடம், “நீ பூலோகம் சென்று கீதையின் அர்த்தத்தை மக்களுக்கு எளிமையாக எடுத்துரைத்து உலகைத் திருத்து,” என்றார். மகாலட்சுமி மறுத்து விட்டாள். “ராமாவதார காலத்தில் சீதையாக வந்து, உங்களுடன் பட்ட கஷ்டம் போதாதா? குறிப்பாக, என்னையே சந்தேகப்பட்டு பேசினீர்களே! இனியும் நான் செல்லமாட்டேன். கிருஷ்ணாவதாரத்தில் நான் ருக்மிணியாக <உங்களுடன் வந்தேன். ஆனால், சத்யபாமா மூலம் அவஸ்தைப்பட்டேன். இனிமேல், வைகுண்டத்தை விட்டு நகர்வதாக இல்லை” என்றாள்.இதனால், பூமாதேவியைத் திரும்பிப் பார்த்தார் பகவான். பார்வையிலேயே கட்டளையை ஏற்றாள் பூமாதேவி. பூலோகத்தில் பிறந்து கஷ்டப்படப் போகிறோம் எனத்தெரிந்தும், உலக மக்களைப் பாதுகாக்க, ஸ்ரீவில்லிபுத்துõரிலுள்ள நந்தவனத்தில், பெரியாழ்வாரின் திருக்குமாரத்தியாக அவதரித்தாள்.