ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கேட் அகற்றம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் நீராட செல்லும் தீர்த்த கேட், மேற்கூரையை ஊழியர்கள் அகற்றினர். ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி 1 முதல் 6 தீர்த்த கிணறுகளை மாற்றி கோயில் 2ம் பிரகாரத்தில் அக்.,28 ல் பிரதிஷ்டை செய்தனர். இதனை தொடர்ந்து 1வது தீர்த்தமும் டிச.,14ல் 2ம் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோயில் வடக்கு கோபுர வாசல் வழியாக வந்து புனித நீராடி செல்கின்றனர். இதனால் வடக்கு ரதவீதியில் பக்தருக்கு நீராட மேற்கூரையுடன் வரிசை கேட் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று, ஏற்கெனவே தெற்கு, கிழக்கு ரதவீதியில் இருந்த தீர்த்த கேட் கம்பிகள், மேற்கூரை தகடுகளை ஊழியர்கள் அகற்றினர். இதனை ஒரிரு தினங்களில் வடக்கு ரதவீதியில் பொருத்த உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.