பழநியில் கார்த்திகைப் பெருவிழா: பிரதோஷ வழிபாடு
பழநி: கார்த்திகை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந் தது. மார்கழி கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதேபோல பழநிமலைக்கோயில் முருகருக்கு அபிஷேகம், பூஜையும், பக்தி இன்னிசை, சொற்பொழிவுகள் நடந்தது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருமுருக பக்தசபாவினர் செய்தனர்.பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடியில் இரவில் மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பிரேதாஷத்தை முன்னிட்டு இடும்பன்கோயில், அ. கலையம்புத்துார் கல்யாணி, கைலாசநாதர்கோயில், புதுநகர் சிவன்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரேதாஷ வழிபாடு நடந்தது.