மார்கழி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல்: மார்கழி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவில், பாலதண்டாயுதபாணிக்கு, மார்கழி காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில், சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.
* நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மூலவருக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில், பாலதண்டாயுதபாணி அருள் பாலித்தார். மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதே போல், உற்சவர் பாலதண்டாயுதபாணி, வள்ளி தெய்வானையுடன் வெண்பட்டு உடுத்தி, கல்யாண சுப்ரமணியர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, சிறப்பு யாக வேள்வி நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், வையப்பமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ப.வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.