அன்னூர் ஐயப்பன் திருவிழா
ADDED :2558 days ago
அன்னூர்: அன்னூரில் ஐயப்பன் திருவிழா இன்று டிசம்., 21ல் துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.
அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டி லுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 49ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா நேற்றுமுன்தினம் (டிசம்., 19ல்) வாஸ்து பூஜையுடன் துவங்கியது. நேற்று (டிசம்., 20ல்) அதிகாலையில், முதற்கால ஹோமமும், பின்னர் கொடியேற்றமும் நடந்தது.
மாலையில், இரண்டாம் கால ஹோமமும் நடந்தது. இன்று (டிசம்., 21ல்) மாலையில் மூன்றாம் கால ஹோமம் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலையில் கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் நடக்கிறது. 22ம் தேதி மதியம் 12:30 மணிக்கு யானை, செண்டை மேளம், ஜமாப் இசைக்குழு மற்றும் ஐயப்ப பக்தர்களின் பஜனை யுடன், சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது.