உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமனூர் மகாமுனி அயன்கள் படையல் பூஜை மாங்கல்ய நோம்பு

சோமனூர் மகாமுனி அயன்கள் படையல் பூஜை மாங்கல்ய நோம்பு

சோமனூர்:சோமனூர் அருகே குமாரபாளையத்தில் இன்று (டிசம்., 21ல்) மகாமுனி அயன்கள் படையல் பூஜை மற்றும் நாளை (டிசம்., 22ல்)மாகாளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜையும் நடக்க உள்ளன.

சோமனூர், குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு இன்று (டிசம்., 21ல்) மதியம் ஒரு மணியளவில் மகாமுனி அயன்கள் படையல் பூஜை நடக்கிறது. இந்தப் படையல் பூஜையில் பொதுமக்களும் பக்தர்களும் திரளாக கலந்து கொள்வர். பூஜைக்குப் பின்னர் மகா அன்னதானம் நடைபெறுகிறது.

இதே ஊரில் உள்ள மாகாளியம்மன்  திருக்கோவிலில், 4ம் ஆண்டு மாங்கல்ய நோம்பு விழா நாளை (டிசம்., 22ல், சனிக்கிழமை) நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மாங்கல்ய நோம்பு, 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் இரவு 8:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !