பெத்தநாயக்கன்பாளையம், உலக நன்மை வேண்டி பெருமாள் கோவிலில் பூஜை
ADDED :2557 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், பேளூர் கரடிப்பட்டி, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், உலக நன்மை வேண்டி, சிறப்பு பூஜை நேற்று 20 ல்நடந்தது. அதில், குடும்பத்தில் செல்வம் பெருக, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, நவக்கிரக தோஷங்கள் நீங்க, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி, லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டியில், முக்கிய வீதிகள் வழியாக, மேள, தாளம் முழங்க, திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, ஸ்பீடு கிங் நண்பர்கள், மக்கள் செய்திருந்தனர்.