விருத்தாசலத்தில் சாய்பாபா பிறந்த நாள் விழா
ADDED :2495 days ago
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சத்தய சாய்பாபா 93வது பிறந்த நாள் விழா இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டது.விருத்தாசலம் சத்யசாய் சேவா சமிதி சார்பில் கடந்த 22ம் தேதி சாய்பாபா உருவபடம் ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று (டிசம்., 23ல்) காலை நடந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட தலைவர் சாய் பிரசாத் தலைமை தாங்கினார். விஜயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் சரவணன், பேராசிரியர் வைரமாணிக்கம், மாநில தலைவர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர். வசந்த நிலையம் உரிமையாளர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.பாலவிகாஸ் குரு சாந்தி நன்றி குமார்.