நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :2495 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ரத்தினம் தெரு சக்தி விநாயகர் கோவிலில் அய்யப்பனுக்கு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.இதையொட்டி, விநாயகர், அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் மலர்கள் தூவி பத்து காலம் லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர்.பூஜைகளை குருசாமிகள் கணேசன், சசிக்குமார், ராஜேந்திரன் செய்தனர்.