திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணர் ஜெயந்தி விழா
ADDED :2698 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் 139வது ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் 139வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ரமணர் சன்னதிக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று ரமணர் பகவான் பாடல்களை பாடினார். விழாவில் கார்த்திக்ராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.