ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜருக்கு திருமஞ்சனம்
ADDED :2563 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இராப்பத்து உற்சவ விழா நடந்து வருகிறது.இந்த விழாவின், 6ம் நாளான நேற்று 23ல், மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, வைணவ மகான் ராமானுஜருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.