வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புஷ்ப யாகம்
ADDED :2564 days ago
வாலாஜாபேட்டை: இரண்டு டன் மலர்களை கொண்டு, மஹா புஷ்ப யாகம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தன்வந்திரி பெருமாளுக்கு, 60 வகையான, இரண்டு டன் மலர்கள் கொண்டு, புஷ்ப யாகம் நடந்தது. புதுச்சேரி சாந்தகுமாரி சுகுமாரன் தலைமையில், யாகத்தை நடத்திய முரளிதர சுவாமிகள் பேசினார். பக்தர்களுக்கு, மல்லிகை, முல்லை, வெண் தாமரை, அரளி, பூவரசம்பூ, வில்வம் என, 60க்கும் மேற்பட்ட மலர்கள், பிரசாதமாக வழங்கப்பட்டன.