விழுப்புரம் ரயிலடி அருகே அய்யப்பன் கோவிலில் கைப்புத்தக நூல் வெளியீடு
ADDED :2563 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி அருகே அமைந்துள்ள தர்மசாஸ்தா அய்யப்ப சுவாமி கோவிலில் பக்தர்களின் கைப்புத்தகம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.விழாவை யொட்டி, நேற்று (டிசம்., 23ல்)காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், 8.00 மணிக்கு அய்யப்ப சுவாமி விக்ரஹம் உற்சவருக்கு ஆராட்டு விழா, 10.00 மணிக்கு பால்குட ஊர்வலம், 10.30க்கு பாலாபிஷேகம் நடந்தது.
பின், அய்யப்பமார்களின் கைப்புத்தக நூலின் முதல் பிரதியை, ராஜகணபதி ஆலய நிறுவனர் பழனிவேல் வெளியிட, தெற்கு ரயில்வே உதவி மண்டல பொறியாளர் வசிஷ்ட் கவுரங் ராஜேந்திரா பெற்று கொண்டார். பின் பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.