உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொல் விளையாட்டு விளையாடலாமா

சொல் விளையாட்டு விளையாடலாமா

இந்தப் பேருதான் ஏழுமலையானுக்கு பிடிக்கும் திருப்பதி ஏழுமலையானை நாராயணா என்று கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷப்படமாட்டார். அவரது சொந்தப்பெயரான சீனிவாசன், வெங்கடாஜலபதி என்ற பெயர்களிலும் கூட அவருக்கு அதிக விருப்பம் கிடையாது. ஆனால், கோவிந்தா என்று கூப்பிட்டால், நம்மை திரும்பி பார்ப்பானாம். காரணம், அவன் பூலோகத்துக்கு வந்து ஆயர்களோடும், ஆய்ச்சியரோடும் மாடு மேய்க்கச் சென்ற போது, அவர்கள் அழைத்த பெயர் இது. அதனால் தான் திருப்பதி முழுக்க கோவிந்தநாமம் ஒலிக்கிறது. பெருமாள் கோயில் பஜனைகளில் கோவிந்த நாமத்துக்கே முக்கியத்துவம். பஜனை துவக்கத்திலும், இடை இடையேயும் கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று ஒருவர் சொல்ல மற்றவர்கள் கோவிந்தா கோவிந்தா என்பதும் இதனால் தான். இந்த மந்திரம் பெருமாளுக்கு ஏன் பிடிக்கும் என்றால், அவன் மாடு மேய்க்க பூலோகம் வந்த போது மிகவும் எளிமையாக இருந்தான். அப்போது, அவனுக்கு பூலோகத்தினர் சூட்டிய பெயர் மிகவும் பிடித்து விட்டது. எளிமையையே நான் விரும்புகிறேன் என்று இந்த நாமத்தை விரும்பிக் கேட்பதன் மூலம் சொல்லாமல் சொல்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !