உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புருஷன்மாரே! வீட்டுக்கு நிறைய கொடுங்க!

புருஷன்மாரே! வீட்டுக்கு நிறைய கொடுங்க!

ஒரு ஆணின் பெயர் ரேஷன் கார்டில் மட்டும் வீட்டுத்தலைவர் என்ற இடத்தில் இருந்து பயனில்லை. நிஜமாகவே, அவன் வீட்டுத்தலைவனாக இருக்க வேண்டும். சம்பாதிக்கிற பணத்தை பொறுப்புடன் அம்மாவிடமோ, மனைவியிடமோ ஒப்படைக்க வேண்டும். என் புருஷன் எனக்கு ஒண்ணுமே தருவதில்லை என்று ஒரு மனைவி சொன்னால், அது அந்த ஆணுக்குத்தான் கேவலம். காரணம், புருஷன் என்ற சொல்லின் முதல் இரண்டெழுத்தான புருஎன்பதற்கு நிறையக் கொடுக்கிறவன் என்றும், எடுக்க எடுக்க குறைவில்லாதவன் என்றும் அர்த்தம். அதாவது, குடும்பத்துக்கு தேவையான அளவு பொருளைக் கொடுக்க வேண்டும். மேலும், தேவைப்பட்டாலும் கொடுக்க தயாராகும் அளவு உழைப்பாளியாகத் திகழ வேண்டும். இனியாவது, புருஷன் என்ற பட்டத்தை பெயரளவுக்கு வச்சுக்காம, வீட்டுக்கு ஏதாச்சும் கொடுக்கிற வழியைப் பாருங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !