உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில் செவ்வாடை பக்தர்கள் சாலையோரம் சமையல்

மாமல்லபுரத்தில் செவ்வாடை பக்தர்கள் சாலையோரம் சமையல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் வரும் மேல்மருவத்தூர் பக்தர்கள், சாலையோரம் சமைத்து உண்பதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.மேல்மருவத்தூர், சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு வழிபட வரும், தமிழக, ஆந்திர, கர்நாடக மாநில பக்தர்கள், மாமல்லபுரம் சிற்பங்களையும் காண, இங்கு சுற்றுலா வருகின்றனர்.டிசம்பர்., முதல், சில மாதங்கள் வரை, செவ்வாடை பக்தர்கள்கூட்டம் அதிகம் இருக்கும்.

குழுக்களாக வரும் இவர்கள், செலவு காரணமாக விடுதிகளில் தங்காமல், முக்கிய சாலை பகுதிகளில் பேருந்துகளை நிறுத்தி, பேருந்திலே உறங்குகின்றனர்.சாலையோர திறந்த வெளியில், எரிவாயு உருளை மூலம் சமைத்து, அங்கேயே உண்கின்றனர். எரிவாயு ஆபத்தாலும், சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளாலும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !