உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வையாளி கண்டருளல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வையாளி கண்டருளல்

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் நடந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கடந்த, 7ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த பின், 18ம் தேதி, சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.ராப்பத்து உற்சவத்தின், எட்டாம் திருநாளான நேற்று, வேடுபறி உற்சவம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, சந்தனு மண்டபத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டப மணல்வௌியில், மாலை, 5:15 மணிக்கு மேல், வையாளி கண்டருளினார்.இரவு, 7:30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், இரவு, 11 மணிக்கு, மூலஸ்தானம் சென்றடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !