போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2510 days ago
போடி : திருமலை திருப்பதியில் நடப்பது போல போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், சீர்வரிசை, மணமகன் வரவேற்பு, பாலும் பழம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.இதனையொட்டி சிறப்பு அலங்காரம், ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பூஜைகளை கார்த்திக் பட்டாச்சாரியார் குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.