சம்பாசஷ்டி
ADDED :5019 days ago
சம்பாசுரன் என்பவன் தன்னை யாரும் கொல்லக்கூடாது என்றும், அப்படி கொல்ல முயன்றால் உடம்பில் இருந்து சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் அசுரனாக மாறவேண்டும் என்றும் சிவனிடம் வரம் பெற்றான். அந்த ஆணவத்தால் அனைத்து உலகத்தையும் ஆட்டிப்படைத்தான். அசுரனை வதம் செய்ய நாய் வாகனத்துடன் பைரவர் கிளம்பினார். திரிசூலத்தால் அவனைக் கொன்றார். சிந்திய ரத்தத்தை அவருடன் வந்த நாய் குடித்து விட்டது. சம்பாசுரனை வதம் செய்த தினத்தை சம்பாசஷ்டி என்று பைரவர் கோயில்களில் கொண்டாடுவர்.