உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

புதுச்சேரி:புத்தாண்டை முன்னிட்டு, மணக்குள விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் இன்று (ஜன., 1ல்) அருள்பாலிக்கிறார்.

ஆங்கில புத்தாண்டு இன்று (ஜன., 1ல்) பிறப்பதையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில், இன்று காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 5:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடக்கிறது.

வெளியில் உள்ள மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார்.காலை 5:45 மணியில் இருந்து, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. புதிய ஆண்டின் முதல் நாளான இன்று (ஜன., 1ல்) மணக்குள விநாயகரை தரிசனம் செய்வதற்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.அனைவரும் தரிசனம் செய்யும் வகையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !