திருப்பரங்குன்றத்தில் திருக்கோயில் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED :2509 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் திருக்கோயில் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். பொருளாளர் கல்யாண சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர் புகழேந்தி வரவேற்றார். ஏழாவது நிதிக்குழுவில்அறநிலையத்துறை பணியாளர்களுக்கு வழங்குவது போல திருக்கோயில் பணியாளர்களுக்கும்சம்பளம் வழங்க வேண்டும்.இதை வலியுறுத்தி திருச்சி கூட்டத்தில் சங்கம் எடுக்கும் முடிவுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் கோபி நன்றி கூறினார்.