பழூர் வந்தால் பலன் கைமேல்!
காஞ்சிப்பெரியவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்ந்த மகான் ஆங்கரை கல்யாணராம பாகவதர். 1930 மார்ச் 1ல் திருச்சியில் பிறந்தார். சென்னையில் 50 ஆண்டுகளாக இறைத்தொண்டில் ஈடுபட்டு, தனது ௬௦வது வயதில் சந்நியாச தர்மத்தை ஏற்று ’ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள்’ என அழைக்கப்பட்டார். காஞ்சிப்பெரியவர் முன்னிலையில் 1973 முதல் 1991 வரை ஆண்டு தோறும் பாகவத சப்தாஹ மூல பாராயணம், உபன்யாசம் செய்தார். 2004ம் ஆண்டு ஜனவரி 19ல் ஸித்தி அடைந்தார். இவரது சமாதிக்கோயில் (அதிஷ்டானம்) திருச்சி – கரூர் சாலையில் 10 கி.மீ., தூரத்திலுள்ள பழூர் அக்ரஹாரத்தில் உள்ளது. இங்கு மகாலிங்கசுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி பூஜை நடக்கிறது. சுவாமிகள் பூஜித்த குருவாயூரப்பன், காஞ்சிப்பெரியவர் பாதுகைகளும் இங்குள்ளன. நம் குறிக்கோள் நிறைவேற மந்திரங்களை உபதேசமாக வழங்கிய இவரது அதிஷ்டானத்தை தரிசித்தால் பலன் கைமேல் கிடைக்கும்.