கருணை உள்ளமே! கடவுள்
இளவரசர் ஒருவர் நபிகள் நாயகத்திடம் தன்னை சீடனாக ஏற்கும்படி வேண்டினார்.
“எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார்.
“பக்கத்து நாட்டு இளவரசன் நான். பெயர் ஹாரூன் ஆல் ரசீது” என்றார்.
“ உன்னை நீயே மறக்கும் அளவுக்கு ஆர்வமுடன் எதிலாவது ஈடுபட்டிருக்கிறாயா” எனக் கேட்டார்.
“சதுரங்க விளையாட்டு மிகவும் பிடிக்கும்” என்றார்.
சீடர்களில் ஒருவரை சதுரங்க அட்டையுடன் வரும்படி நாயகம் தெரிவித்தார்.
வந்த சீடருக்கு விளையாடத் தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் அவருக்கு தெரியாது. இந்நிலையில் “போட்டியில் நீ தோற்றால் என் சீடனாக தொடர முடியாது” என அதிர்ச்சியளித்தார்.
இளவரசரிடம், “நீ தோற்றால் சீடனாக உன்னை ஏற்க முடியாது” எனவும் தெரிவித்தார்.
போட்டியில் இளவரசர் அருமையாக விளையாடவே அவரது வெற்றி நிச்சயமாகி விட்டது. இந்நிலையில் இளவரசர் நிமிர்ந்து பார்த்தபோது, சீடர் இயல்பாக இருந்தார். நாயகத்துடன் இருந்த நட்புறவால் அவரது முகம் மலர் போல காட்சியளித்தது. இந்த நல்ல மனிதரின் இறைப்பயணம் வீணாகி விடுமே என வருந்தினார். தோற்றால் நாயகத்தின் சீடராக தொடர மாட்டாரே என்பதால் அவர் மீது கருணை உண்டானது.
வேண்டுமென்றே காய்களை தவறாக நகர்த்த தொடங்கினார்.
அப்போது ஆட்டத்தை கலைத்துவிட்டு, “இருவருமே வென்று விட்டீர்கள்” என்று சிரித்தார் நாயகம்.
மேலும் இளவரசரிடம், “மகனே நீ வென்று விட்டாய். உனது வெற்றி இந்த சீடரின் வெற்றியை விடப் பெரியது. இப்போதே உன்னை சீடனாக்கி கொள்கிறேன்” என தெரிவித்தார்.
பலன் கருதாமல் தியாகம் செய்யும் மனிதனே கருணை மிக்கவன். பரிசுத்தமான எண்ணத்தின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறிவிடும்.