பொன்னை விரும்பும் பூமியிலே...
பத்துவிதமான மனிதர்கள் தங்களின் எதிர்பார்ப்பை கடவுளிடம் தெரிவித்தனர்.
முதல் மனிதன்,“ கோடி கோடியாக பணம் வேண்டும்.” என்றான்.
இரண்டாவது மனிதன், “அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவியை அடைய வேண்டும்.”
மூன்றாவது மனிதன், “நடிகராக புகழுடன் வாழ வேண்டும்.”
நான்காவதாக நின்ற ஒருபெண், “உலக அழகியாக திகழ வேண்டும். உலகமே பாராட்ட வேண்டும்.”
ஒன்பது பேர் இப்படி கேட்க பத்தாவது மனிதன், “ மனிதன் உச்சபட்சமாக எந்த அளவுக்கு நிம்மதியோடும், நிறைவோடும் வாழ முடியுமோ அந்நிலையை அடைய விரும்புகிறேன்” என்றான்.
இதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.
“நிம்மதிக்காக தானே நாங்களும் கேட்டோம். விருப்பம் நிறைவேறினால் நிறைவு வந்து விடுமே..?” என விளக்கமும் கொடுத்தனர்.
“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன். போகலாம்.” என்று சொன்ன கடவுள் பத்தாவது மனிதனிடம், “நீ இங்கு இரு. சற்று நேரத்தில் வருகிறேன்” என சொல்லி விட்டுக் கிளம்பினார்.
ஒன்பது பேருக்கும் செல்ல மனமில்லை.
’கடவுள் என்ன சொல்லப் போகிறார்; அவனுக்கு என்ன தரப் போகிறார்’ என்பதை அறிய துடித்தனர்.
பத்தாவது மனிதன் மீது பொறாமை உண்டானதால், ஒன்பது பேரின் நிம்மதியும் குலைந்தது.
பத்தாவது மனிதனோ சந்தோஷத்துடன் கடவுளுக்காக காத்திருந்தான்.
வாழ்வில் நீங்கள் ’பத்தாவது மனிதனா...இல்லை பத்தாது என்கிற மனிதனா..?’ என இப்போதே முடிவு செய்யுங்கள்.