ரமணரின் பாதம் எது? சிரசு எது?
ADDED :2868 days ago
ஒரு நாள் பிற்பகல் பக்தர் ஒருவர் ரமண மகிரிஷியிடம் “சுவாமி எனக்கு ஒரு விருப்பம். என் தலையைத் (சிரசு) தங்கள் திருவடியில் வைத்து வணங்க வேண்டும்” என்றார்.
“ஓ அதுவா! ஆனால் எது தலை, எது கால்? என்று கேட்டார் ரமண பகவான். அன்பர் மவுனம் ஆனார். சற்று நேரம் கழித்து பகவான் கூறினார். “நான் என்ற அகந்தை உணர்வே சிரசு. அகந்தை கரையுமிடமே குருவின் பாதம்” என்றார்.